பெரம்பூர், திருச்சி கிழக்கு மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகள் தொடர்பான தேர்தல் மனுக்கள் – 3 வாரங்களில் பதில் தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தல்

 சென்னை: பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் உள்ளிட்ட நான்கு மனுக்களில், தமிழக முதல்வர் விஜய் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தனித்தனியாக தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நான்கு தேர்தல் மனுக்களும் நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தன. இதனுடன், வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் மற்றும் சிவராஜ் தாக்கல் செய்திருந்த தேர்தல் மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

விசாரணையின்போது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி தேர்தல் தொடர்பான வழக்குகள் ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து, பெரம்பூர், திருச்சி கிழக்கு மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகள் தொடர்பான அனைத்து தேர்தல் வழக்குகளிலும் முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆகியோர் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.


Previous Next

نموذج الاتصال