“நீட் தேர்வுக்கு தினமும் 17 மணி நேரம் படித்தேன்” - முதலிடம் பிடித்த ஆரியன் குப்தா

புதுடெல்லி: ஜூன் 21-ஆம் தேதி மீண்டும் நடத்தப்பட்ட நீட் (NEET-UG) தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்வில் 720 மதிப்பெண்களில் 715 மதிப்பெண்கள் பெற்று, பஞ்சாபைச் சேர்ந்த ஆரியன் குப்தா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பன்ஷுல் பன்சால் ஆகியோர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.

மேலும், 19 மாணவர்கள் 700 மதிப்பெண்களும், 138 மாணவர்கள் 690 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 690-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற 138 பேரில் 93 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முதல்முறையாக நீட் தேர்வை எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது வெற்றி குறித்து பேசிய ஆரியன் குப்தா, “நீட் தேர்வுக்காக தினமும் 16 முதல் 17 மணி நேரம் வரை படித்தேன். கடுமையான உழைப்பும், முழுமையான அர்ப்பணிப்பும் தான் இந்த வெற்றிக்கு காரணம். தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்,” என்றார்.

மேலும், தனது பெற்றோர் இருவரும் மருத்துவர்கள் என்றும், சிறுவயதில் புற்றுநோயால் பாட்டியை இழந்த சம்பவம் தனது வாழ்க்கையை மாற்றியதாகவும் அவர் தெரிவித்தார். அதனால் எதிர்காலத்தில் புற்றுநோய் சிகிச்சை நிபுணராகி நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தனது கனவு என ஆரியன் குப்தா கூறினார்.புதுடெல்லி: ஜூன் 21-ஆம் தேதி மீண்டும் நடத்தப்பட்ட நீட் (NEET-UG) தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்வில் 720 மதிப்பெண்களில் 715 மதிப்பெண்கள் பெற்று, பஞ்சாபைச் சேர்ந்த ஆரியன் குப்தா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பன்ஷுல் பன்சால் ஆகியோர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.

மேலும், 19 மாணவர்கள் 700 மதிப்பெண்களும், 138 மாணவர்கள் 690 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 690-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற 138 பேரில் 93 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முதல்முறையாக நீட் தேர்வை எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது வெற்றி குறித்து பேசிய ஆரியன் குப்தா, “நீட் தேர்வுக்காக தினமும் 16 முதல் 17 மணி நேரம் வரை படித்தேன். கடுமையான உழைப்பும், முழுமையான அர்ப்பணிப்பும் தான் இந்த வெற்றிக்கு காரணம். தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்,” என்றார்.

மேலும், தனது பெற்றோர் இருவரும் மருத்துவர்கள் என்றும், சிறுவயதில் புற்றுநோயால் பாட்டியை இழந்த சம்பவம் தனது வாழ்க்கையை மாற்றியதாகவும் அவர் தெரிவித்தார். அதனால் எதிர்காலத்தில் புற்றுநோய் சிகிச்சை நிபுணராகி நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தனது கனவு என ஆரியன் குப்தா கூறினார்.

Previous Next

نموذج الاتصال