No results found

    செயற்கைக் கோள் தரவுகள், ஏஐ தொழில்நுட்பம் அடிப்படையில் நீர்நிலைகள் பாதுகாப்புக்கு இணையதளங்கள் தொடக்கம்


    செயற்கைக் கோள் தரவு மற்​றும் ஏஐ தொழில்நுட்​பம் அடிப்படையில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை கண்டறிதல், நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் நீர்வள தகவல் மேலாண்மை அமைப்புக்கான இணையதளங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 169 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் (டிஎன்​பிஎஸ்​சி) ஒருங்​கிணைந்த பொறி​யியல் பணிக்​கான தேர்வு மூலம் உதவிப் பொறி​யாளர் (சி​வில்) பணி​யிடத்​துக்கு தேர்வு செய்​யப்​பட்​டு, நீர்​வளத் துறைக்கு ஒதுக்​கப்​பட்ட 169 உதவி பொறி​யாளர்​களுக்கு பணி நியமன ஆணை​களை முதல்​வர் ஸ்டா​லின் நேற்று வழங்​கி​னார்.

    இணை​யதளங்​கள் தொடக்​கம்: தமிழ்​நாடு நீர்வள தகவல், மேலாண்மை அமைப்​புக்​கான (TNWRIMS) இணை​யதளத்தை உரு​வாக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டது. இந்த இணை​யதளத்தை உரு​வாக்க, நீரை பயன்​படுத்​தும் பல்​வேறு பங்​கு​தா​ரர்​களிடம் இருந்து அனைத்து தரவு​களும் சேகரிக்​கப்​பட்​டுள்​ளன. இதன்​மூலம் எதிர்​கால முன்​மொழிவை உரு​வாக்க, நீர் தொடர்​பான தரவு தளத்​துக்​கான, நம்​பகத் தன்​மை​யுடன் கூடிய ஒற்றை ஆதா​ர​மாக இந்த இணை​யதள அமைப்பு (http://tnwrims.tn.gov.in) செயல்​படும்.

    நிகழ்​நேர தகவலை அளிக்​கும் இந்த அமைப்​பில் நீர் வழங்​கல், தேவை, தரம், பயனர்​கள் போன்​றவை, கிராம தண்​ணீர் வரவு - செல​வு, வறட்சி மற்​றும் குடிநீர் பற்​றாக்​குறை நில​வரம், நீர்​வரத்து முன்​னறி​விப்​பு, நீர்த்​தேக்க செயல்​பாடு மேம்​படுத்​தல், நிலத்​தடி நீர் தகவல், ஆற்​றுப் படு​கைகள் இடையே நீர் பரி​மாற்​றம், நீர் பாது​காப்பு திட்​டம் போன்ற 11 தொகு​தி​கள் உள்​ளன. தமிழக நீர்​வளத் துறை இணை​யதளத்​தில் இந்த அமைப்பு இணைக்​கப்​பட்​டுள்​ளது.

    அதே​போல, செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பம், செயற்​கைக் கோள் தரவு​களை பயன்​படுத்தி சென்​னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம் மாவட்​டங்​களில் நீர்​நிலைகளில் உள்ள ஆக்​கிரமிப்பு மற்​றும் நீரின் தரத்தை கண்​காணிக்க இணை​யதளம் உரு​வாக்க ரூ.3.55 கோடி ஒதுக்​கப்​பட்​டது. வரு​வாய் துறை ஆவணங்​களில் குறிப்​பிடப்​பட்​டுள்ள நீர்​நிலைகளில் ஏற்​படும் ஆக்​கிரமிப்​பு, அத்​து​மீறல் போன்​றவற்றை இதன்​மூலம் கண்​டறிய​லாம்.

    நீர்​நிலைகளின் பரப்​பள​வில் ஏற்​படும் மாற்​றங்​கள் மூலம் கொள்​ளளவு இழப்பை கண்​டறிய​லாம். புல எண்​கள் அடிப்​படை​யில் நீர்​நிலைகளில் ஏற்​படும் மாற்​றங்​கள் குறித்து சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களுக்கு விழிப்​பூட்​டல் தகவல்​களை அனுப்​பி, ஆக்​கிரமிப்பை அகற்​றும் பணியை மேற்​கொள்​ளச் செய்​ய​லாம். இதன் முன்​னோடி திட்​ட​மாக, அம்​பத்​தூர் ஏரி​யில் ஆக்​கிரமிப்​பு​களை கண்​டறி​யும் வசதி செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

    செம்​பரம்​பாக்​கம் ஏரி​யில் உள்ள நீரின் தரத்தை கண்​காணிக்க ‘சென்​சார்’ கருவி நிறு​வப்​பட்​டு, நீரின் தரம் மற்​றும் இதர தரவு​கள் இணை​யதளத்​தில் (http://tnswip.tn.gov.in) நிகழ்​நேரத்​தில் தெரிவிக்​கப்​படு​கிறது. பூண்டி நீர்த்​தேக்​கத்​தில் வண்​டல் மண் படிவு கணக்​கீட்​டுக்​காக பேத்​மெட்​ரிக் மற்​றும் ஆளில்லா விமானம் மூலம் தரவு​கள் பெறப்​பட்டு மதிப்​பீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

    இந்த இணை​யதளங்​களை முதல்​வர் ஸ்டா​லின் நேற்று பயன்​பாட்​டுக்கு கொண்​டு​வந்​தார். சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நடை​பெற்ற இந்த நிகழ்​வில் நீர்​வளத் துறை அமைச்​சர் துரை​முரு​கன், தலை​மைச் செயலர் முரு​கானந்​தம், நீர்​வளத் துறை செயலர் ஜெய​காந்​தன், முதன்மை தலைமை பொறி​யாளர்​ ரமேஷ் உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

    Previous Next

    نموذج الاتصال