No results found

    ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினர் சேர்க்கைக்காக சென்னையில் வீடுவீடாக மக்களை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்


    ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ கட்சி உறுப்​பினர் சேர்க்கை முன்​னெடுப்​புக்​காக, சென்​னை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வீடு​வீ​டாகச் சென்று பொது​மக்​களை சந்​தித்​தார். இதே​போல், தமிழகம் முழு​வதும் அமைச்​சர்​கள், நிர்​வாகி​கள் என அனை​வரும் பொது​மக்​களைச் சந்​தித்து அரசின் திட்​டங்​களை விளக்​கியதுடன், உறுப்​பினர் சேர்க்​கை​யிலும் ஈடு​பட்​டனர்.

    தமிழக சட்​டப்​பேர​வைக்கு 2026-ம் ஆண்டு பொதுத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில் ஆளும் திமுக 7-வது முறை​யாக வெற்றி பெறும் முனைப்​புடன் உள்ளது. இதற்​காக பல்​வேறு அடிப்​படை பணி​களை மேற்​கொண்டு வரு​கிறது. இதன் ஒருபகு​தி​யாக கட்சி உறுப்​பினர்​கள் எண்​ணிக்​கையை அதி​கரிக்​கும் நடவடிக்​கை​யில் திமுக இறங்​கி​யுள்​ளது.

    இதற்​காக ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ என்ற முன்​னெடுப்​பை, ஜூன்மாதம் மதுரை​யில் நடை​பெற்ற பொதுக்​குழு​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​தார். அதன்​படி, ஜூலை 1-ம் தேதி ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ செயல்​திட்​டத்தை முதல்​வர் தொடங்கி வைத்​தார். அதன்​பின், 2-ம் தேதி தமிழகத்​தில் திமுக கட்​சிரீ​தி​யாக உள்ள 76 மவட்​டங்​களி​லும் பொதுக்​கூட்​டங்​கள் நடத்​தப்​பட்​டன.

    அதைத்​தொடர்ந்​து, நேற்று வீடு​வீ​டாகச் சென்று ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ திட்​டத்​தில் பொது​மக்​களைச் சந்​திக்​கும் நிகழ்வு தொடங்​கியது. இந்த சந்​திப்​பின் மூலம் வாக்​குச்​சாவடிக்கு 30 சதவீதம் பேரை கட்​சி​யில் சேர்ப்​ப​தற்​கான இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், சென்னை ஆழ்​வார்ப்​பேட்​டை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று காலை வீடு​வீ​டாகச் சென்று பொது​மக்​களைச் சந்​தித்து ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ இயக்​கம் குறித்து எடுத்​துரைத்தார். அப்​போது, 6 கேள்வி​கள் அடங்​கிய படிவத்தை பொது​மக்​களிடம் அளித்​து, அதற்கு பொது​மக்​கள் அளிக்​கும் பதிலை நேரில் கேட்​டறிந்​தார்.

    குறிப்​பாக ‘எந்த நெருக்​கடி​யான சூழலிலும் தமிழகத்​தின் மண், மொழி, மானம் காப்​பாற்​றப்பட வேண்​டும் என்று நினைக்​கிறீர்​களா?’ என பொது​மக்​களிடம் முதல்​வர் கேட்டு அதற்​கான பதிலைப் பெற்​றார். இது​போன்று அடுத்​தடுத்த கேள்வி​களுக்​கும் மக்​களிடம் இருந்து பதிலை பெற்று கள நில​வரத்தை அறிந்து கொண்​டார். இதுகுறித்து முதல்​வர் வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில், ‘‘தமிழகத்​தின் மண், மொழி, மானம் காக்க, சாதி மதம் அரசி​யல் கடந்து ஓரணி​யில் தமிழகம் வெல்​லட்​டும். இதற்​காக அடுத்த 45 நாட்​கள் திமுக மாவட்​டச் செய​லா​ளர்​கள் சட்​டப்​பேர​வை, நாடாளுமன்ற உறுப்​பினர்​கள், மூத்த முன்​னோடிகள் என அனை​வரும் பரப்​புரை​யில் ஈடு​பட்டு தமிழகத்​தில் உள்ள அனை​வரை​யும் ஒன்​றிணைக்க வேண்​டும்’’ என தெரி​வித்​துள்ளார்.

    பொது​மக்​களை முதல்​வர் சந்​தித்​த​போது, அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், இணை அமைப்பு செய​லா​ளர் அன்​பகம் கலை உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர். இதே​போல், தமிழகம் முழு​வதும் அமைச்​சர்​கள், எம்​.பி.க்​கள்,எம்​எல்​ஏ.க்​கள், மாவட்​டச் செய​லா​ளர்​கள், நிர்​வாகி​கள் தங்​கள் பகு​தி​யில் வாக்​குச்​சாவடிக்கு உட்​பட்ட இடங்​களில் வசிக்​கும் மக்​களிடம் வீடு​வீ​டாகச் சென்று படிவத்தை அளித்து அதில் உள்ள கேள்வி​களுக்கு பதிலைப் பெற்​று, உறுப்​பினர்​ சேர்​க்​கையில்​ ஈடுபட்​டனர்​.

    Previous Next

    نموذج الاتصال