No results found

    பிஹாரில் ரூ.31 கோடியை திருடி சூதாடிய கோட்டக் மஹிந்திரா வங்கி கிளை மேலாளர்


    பிஹார் மாநிலத்​தில் உள்ள கோட்​டக் மஹிந்​திரா வங்​கி​யின் ஒரு கிளை மேலா​ளர் சூதாட்​டம் மற்​றும் பந்தய செயலிக்கு அடிமை​யாகி உள்​ளார். இதையடுத்​து, கடந்த 2 ஆண்​டு​களாக பிஹார் அரசின் வங்​கிக் கணக்​கி​லிருந்து கோடிக்​கணக்​கான பணத்தை திருடி சூதாடி அல்​லது பந்​த​யம் கட்டி உள்​ளார். குறிப்​பாக, பிஹார் அரசின் மாவட்ட நிலம் கையகப்​படுத்​தல் அதி​காரிக்​கான காசோலைகளில் போலி கையெழுத்தை இட்​டும் காசோலை குளோனிங் மூல​மும் மொத்​தம் ரூ.31.93 கோடியை மோசடி செய்​துள்​ளார்.

    பிடிப​டா​மல் இருப்​ப​தற்​காக, வாடிக்​கை​யாளர்​களின் ஆதார் மற்​றும் கேஒய்சி விவரங்​களை சட்​ட​விரோத​மாக பயன்​படுத்தி 21 போலி வங்​கிக் கணக்​கு​களை திறந்​துள்​ளார். அதில் பணத்தை பரி​மாற்​றம் செய்​து, அந்​தப் பணத்தை வெளி​நாடு​களில் உள்ள சட்​ட​விரோத பந்தய செயலிகளுக்கு அனுப்பி உள்​ளார்.

    2021-ம் ஆண்டு வங்கி ஊழியர் ஒரு​வர் சந்​தேகத்​துக்​கிட​மான ஆர்​டிஜிஎஸ் பரி​மாற்​றத்​தைக் கண்​டறிந்​ததையடுத்​து, இந்த மோசடி வெளிச்​சத்​துக்கு வந்​தது. இதையடுத்து அந்த கிளை மேலா​ளர் கைது செய்​யப்​பட்​டார். இந்த வழக்கை விசா​ரித்து வரும் அமலாக்​கத் துறை, தென்​னாப்​பிரிக்கா மற்​றும் பிலிப்​பைன்​ஸில் உள்ள பந்தய செயலிகள் மற்​றும் போலி நிறு​வனங்​களுக்​கான தொடர்​பு​களை கண்​டறிந்​துள்​ளது. இது தொடர்​பான ஆதா​ரங்​களை பிஹார் காவல் துறை​யினருடன் அமலாக்​கத் துறை பகிர்ந்து கொண்​டது.

    Previous Next

    نموذج الاتصال