No results found

    ‘மக்களை ​காப்போம்​, தமிழகத்தை மீட்போம்​’ பிரச்சாரம்​: மேட்டுப்பாளையத்தில்​ இன்று பழனிசாமி தொடக்கம்​


    அ​தி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி ‘மக்​களை ​காப்​போம், தமிழகத்​தை மீட்​போம்​’ என்​ற பிரச்​சா​ரத்​தை மேட்​டு​ப்​பாளை​​யத்​தில்​ இன்​று தொடங்​கு​கிறார்​. இதையொட்​டி ரோடு ஷோ நடத்​து​ம்​ அவர்​ பல்​வேறு இடங்​களில்​ மக்​களிடம்​ பேசுகிறார்​.

    2026 சட்​டப்​பேர​வைத்​ தேர்​தலை​யொட்​டி ​முன்​னாள்​ ​முதல்​வரு​ம்​, அ​தி​முக பொதுச்​ செய​லா​ள​ரு​மான பழனி​சாமி ‘மக்​களை ​காப்​போம்​, தமிழகத்​தை மீட்​போம்’ என்​ற பிரச்​சா​ரப்​ பயணத்​தை இன்​று தொடங்​கு​கிறார்​. ​காலை 9 மணி​க்​கு கோவை ​மாவட்​டம்​ மேட்​டு​ப்​பாளை​​யம்​ சட்​டப்​பேர​வைத்​ தொகு​தி​க்​கு உட்​பட்​ட தேக்​கம்​பட்​டி​யில்​ உள்​ள வனப​த்​ர ​காளி​​யம்​மன்​ கோயி​லில்​ சு​வாமி தரிசனம்​ செய்​து​விட்​டு, அங்​குள்​ள தனி​யார்​ ​திரு​மண மண்​டப​த்​தில்​ ​விவ​சா​யிகளு​டன்​ கலந்​துரை​யாடு​கிறார்​. ​மாலை 4.35 மணி​க்​கு மேட்​டு​ப்​பாளை​​யம்​- ஊட்​டி ​சாலை​யில்​ ​காந்​தி சிலை அரு​கே ரோடு ஷோ நடத்​துகிறார்​. தொடர்​ந்​து மேட்​டு​ப்​பாளை​​யம்​ பேருந்​து நிலை​யம்​, ​காரமடை பேருந்​து நிறுத்​தம்​, பெரிய​நாயக்​க​ன்​பாளை​​யம்​ பேருந்​து நிறுத்​தம்​, துடியலூர்​ ர​வுண்​டா​னா மற்​றும்​ சர​வணம்​பட்​டி பேருந்​து நிறுத்​தம்​ அரு​கே மக்​களிடம்​ பிரச்​சா​ரம்​ மேற்​கொள்​கிறார்​.

    இர​வு கோவை​யில்​ தங்​கும்​ அவர்​ ​நாளை ​மாலை 4 மணி​க்​கு கோவை வடக்​கு சட்​டப்​பேர​வைத்​ தொகு​தி​க்​கு உட்​பட்​ட வட​வள்​ளி பேருந்​து நிலை​யத்​தில்​ மக்​களிடையே உரை​யாற்​றுகிறார்​. தொடர்​ந்​து ​சாய்​பா​பா ​காலனி​யில்​ ரோடு ஷோ நடத்​துகிறார்​. ​மாலை​யில்​ வடகோவை சிந்​தாமணி, ட​வுன்​ஹால்​ கோனி​​யம்​மன்​ கோ​யில்​, சுங்​கம்​ ர​வுண்​டா​னா, புலியகுளம்​ பகு​தி​களில்​ பிரச்​சா​ரம்​ மேற்​கொள்​கிறார். இதற்​கான ஏற்​பாடு​களை முன்​னாள்​ அமைச்​சர்​ எஸ்​.பி.வேலுமணி உள்​ளிட்​டோர்​ செய்துள்ளனர்​.

    தொண்​டர்​களுக்கு அழைப்​பு... அதி​முக தொண்​டர்​களுக்கு பழனி​சாமி எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: ‘மக்​களைக் காப்​போம்​-தமிழகத்தை மீட்​போம்’ என்ற புரட்​சிப் பயணத்தை உங்​கள் முழு ஆதர​வுடன் நான் தொடங்​கி​யுள்​ளேன். கட்​சி​யின் தொண்​டர்​கள் அனை​வரும் இந்​தப் பயணத்​தில் என்​னோடு பயணிக்க வேண்​டும்.

    கட்சியின் பொதுச் செயலாளராக நான் பொறுப்பு வகித்தாலும், தொண்டர்களில் ஒருவன்தான். தமிழகத்​தில் மீண்​டும் அதி​முக​வின் பொற்​காலத்தை ஏற்​படுத்த நாம் உறு​திபூண்​டுள்​ளோம். தமிழக மக்​களிடம் பொய் வாக்​குறுதி கொடுத்​து, மக்​கள் விரோதப் போக்​கைக் கடைபிடிக்​கும் திமுக அரசால் நம்மை ஒன்​றும் செய்​து​விட முடி​யாது. மக்​கள் மாற்​றத்தை விரும்​பு​கிறார்​கள். நாம் செய்த சாதனை​களை உரக்​கச் சொல்ல வேண்​டும். 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக உறு​தி​யாக வெல்​லும். தனிப்​பெரும்​பான்மை​யுடன் ஆட்​சியை அமைக்​கும். இவ்​வாறு பழனி​சாமி கடிதத்​தில் குறிப்​பிட்​டுள்​ளார்​.

    Previous Next

    نموذج الاتصال