No results found

    அபிராமி அந்தாதி பாடல் - 49


    பலன்: மரணத்துன்பம் அகலும்

    குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெங் கூற்றுக்கு இட்ட
    வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
    அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய்
    நரம்பை அடுத்து இசை வடிவாய்  நின்ற நாயகியே

    பொருள்:
    குரம்பு - உடல். ஆவி - உயிர்.

    நரம்புக்கருவிகள் (யாழ், வீணை போன்ற கருவிகள் - string instruments) எழுப்பும் இனிய இசை வடிவான தலைவியே, எனது ஆயுட்காலம் முடிவுறும்போது, இந்த உடலிலிருந்து உயிரை பிரிக்க, எமன் வருவான். அப்போது நான் மிகவும் பயமுறுவேன். நீ தேவமகளிரோடு என்னிடம் வந்து, உனது வளையல்கள் அணிந்த கரங்களை எனக்கு காட்டி, "பயப்படாதே" என்று கூறவேண்டும்.

    பாடல் (ராகம் - காம்போதி, தாளம் - --விருத்தம் --) கேட்க

    Previous Next

    نموذج الاتصال