No results found

    அபிராமி அந்தாதி பாடல் - 44


    பலன்: பிரிவுணர்ச்சி அகலும்

    தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் 
    அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினாள், ஆகையினால் 
    இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம் 
    துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த்  தொண்டு செய்தே.

    பொருள்:
    அபிராமி அன்னை, நம் தலைவரான சங்கரரின் (சிவனின்) இல்லத்தரசி. அவரது இல்லத்தில் மங்களம் விளங்க வைப்பவள். அவளே, சிவனின் தாய். மற்றவர்களுக்கும் அன்னையே தலைவி, இறைவி. ஆகையினால், அவளுக்கு மட்டுமே தொண்டு செய்து இன்பம் பெறுவேன். தொண்டு செய்யாமல் துன்பத்தில் துவள மாட்டேன்.

    பாடல் (ராகம்: சரஸ்வதி, தாளம்: விருத்தம் ) கேட்க

    Previous Next

    نموذج الاتصال