பலன்: தீமைகள் ஒழியும்
பரிபுர சீரடி, பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்தூர மேனியள், தீமை நெஞ்சில்
புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக் கை,
எரி புரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.
பொருள்:
முந்திய பாடல் 42 ல் கூறியது போல, சிலம்பணிந்த சிவந்த திருவடிகளை உடையவளும், கரங்களில் பாசம் மற்றும் அங்குசம் உடையவளும், இனிய சொற்களை உரைப்பவளும், சிவந்த மேனியினை உடையவளும், தீய எண்ணம் கொண்ட வஞ்சனை நிறைந்த அரக்கன் புரனையும் அவன் இருப்பிடமான திரிபுரத்தினையும் அழித்தவரான சிவபெருமானின் இட பாகத்தில் இருப்பவளும் அன்னை அபிராமியே.
பாடல் (ராகம்-கேதார கௌளை, தாளம் - --விருத்தம்--) கேட்க
