பலன்: நல்லடியார்களின் நட்பு கிடைக்கும்
புண்ணியம் செய்தனமே மனமே - புது பூங்குவளை
கண்ணியும் செய்ய கணவரும் கூடி - நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்க
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே
பொருள்:
புதிதாக மலர்ந்த குவளைப்பூ போன்ற அழகிய கண்கள் உடைய அபிராமியும், சிவந்த கண்களை உடைய அவளது கணவரான சிவபெருமானும் ஒன்றுகூடி, அடியார்களான நம்மையும் ஒன்றாக திரள வைத்து, நம் யாவரையும் (நமது தலைகளை) தங்கள் தாமரை போன்ற பாதங்களில் சேர்த்துக்கொண்டது நாம் செய்த புண்ணியமே என்று நம் மனம் அறிந்து கொள்ளவேண்டும்.
பாடல் (ராகம் - மோகனம், தாளம் - ஆதி) கேட்க
