பலன் - மனதிற்கு பிடித்தாற்போல் திருமணம் நிறைவேறும்
திங்கள் பசுவின் மணம் நாறும் சீரடி, சென்னி வைக்க,
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்,
தங்கட்கு இந்த தவம் எய்துமோ? - தரங்க கடலுள்
வெங்கண் பணியனை மேல் துயில் கூறும் விழுபொருளே
பொருள்:
தரங்க கடல் - பாற்கடல்
வெங்கண் - வெப்பம் ததும்பும் கண். வெப்பத்தால் சிவந்த கண்
பணியனை - பணி - பாம்பு, அனை - தலை அனை போல. அதாவது பாம்பு படுக்கை.
திருப்பாற்கடலில், ஆதி சேஷன் மேல் துயிலும் அன்னை வைஷ்ணவியே, (இங்கே பட்டர், அன்னையே விஷ்ணு என்று பாடுகிறார்.), சந்திரனின் மணம் வீசும் நினது சீர்மிகு திருவடிகளை, என் தலைமேலும் நீ வைக்க நான் என்னதவம் செய்தேனோ! நம் முன்னோர்களும், தேவர்களும் கூட, தங்களுக்கு இந்த பாக்கியம் கிடைக்காதா என்று காத்திருக்கிறார்கள்.
பாடல் (ராகம் - ராமப்ரியா, தாளம் - ஆதி) கேட்க
