ஸ்ரீ தான்யலட்சுமி ஸ்தோத்திரம்

ஸ்ரீ தான்யலட்சுமி தலையில் ஒளிபொருந்திய கிரீடம் அணிந்து, கைகளில் செந்தாமரை, கரும்பு தாங்கி சுகாசனத்தில் அமர்ந்த நிலையில் இருக்கின்றாள். எல்லாவிதமான அலங்காரங்களும் இவளிடத்தில் ஜொலிக்கின்றன.

தியான சுலோகம்:-

வரதாபய சம்யுக்தாம்
         கிரீட மகுடோஜ்வலாம்
அம்புஜஞ் சேக்ஷீசாலிஞ்ச
         கதலீ பலத்ரோணிகாம்
பங்கஜம் தக்ஷவாமேது
         ததாநாம் சுக்லரூபிணீம்
க்ருபா மூர்த்திம் ஜடாஜீடாம்
         சுகாசந சமந்விதாம்
சர்வாலங்கார சம்யுக்தாம்
         சர்வாபரண பூஷிதாம்
மதமத்தாம் மநோஹரி
         ரூபாம் தான்யட்ரீயம் பஜே


பலன்கள்:-

மேற்கண்ட சுலோகத்தை தினமும் 108 முறை கூறி ஸ்ரீதான்யலட்சுமியை வணங்கி வழிபட்டால், தோட்ட, வயல்களில் தான்யங்கள் செழித்து வளர்ந்து களஞ்சியத்தில் எல்லாவித தான்யங்களும் நிறைந்து விளங்கும். நம் வாழ்வில் உணவுப் பஞ்சமே இராது.
Previous Next

نموذج الاتصال