தருமபுரியில் உரிமம் இல்லாத 44 நாட்டுத் துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைப்பு


 தருமபுரி மாவட்டத்தில் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட உரிமம் இல்லாத 44 நாட்டுத் துப்பாக்கிகளை மாவட்ட காவல்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் இ.ஆ.ப. தலைமையில் இன்று நடைபெற்றது.


தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆறு வனச்சரகங்களில் வனத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது, உரிமம் இல்லாமல் பயன்படுத்தப்பட்டு வந்த 44 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.


தருமபுரி, பென்னாகரம், அரூர், கோட்டப்பட்டி, மொரப்பூர் மற்றும் தீர்த்தமலை ஆகிய ஆறு வனச்சரகங்களில் இருந்து இந்தத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.


பறிமுதல் செய்யப்பட்ட 44 நாட்டுத் துப்பாக்கிகளும் தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அதிகாரிகள் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.


அவற்றை மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் நேரில் பார்வையிட்டார். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பான விவரங்களை வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


இதனைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட 44 நாட்டுத் துப்பாக்கிகளும் மாவட்ட காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

Previous Next

نموذج الاتصال