செங்கல்பட்டு மாவட்டத்தில் கூட்டுறவு அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு அமுதம் அங்காடிகள் வாயிலாக சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யும் திட்டம் 21.10.2026 புதன்கிழமை தொடங்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டத்திற்குட்பட்ட வேங்கடமங்கலம் ஊராட்சி, ரத்தினமங்கலம் நியாயவிலைக் கடையில் மாவட்ட மொத்த விற்பனை கூட்டுறவு பண்டகசாலை சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாண்புமிகு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. த. சரத்குமார், கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் சன்னரக அரிசியின் தரத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் மு. வீரப்பன், இ.ஆ.ப., செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு. சௌ. தியாகராஜன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பா. விஜய்ராஜ், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. வெங்கடாசலம், துணைப் பதிவாளர் திருமதி ப. சாவித்திரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். அப்போது, ரத்தினமங்கலம் நியாயவிலைக் கடைக்கு அருகிலுள்ள குளம் பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல், முறையான பராமரிப்பின்றி இருப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், வேங்கடமங்கலம் ஊராட்சியில் உள்ள ரத்தினமங்கலம் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டி முற்றிலும் சேதமடைந்த நிலையில் இருப்பதையும் பார்வையிட்டனர்.
சேதமடைந்த குடிநீர்த் தொட்டியை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துவிட்டுச் சென்றனர்.
