ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக். 16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் காமேஸ்வரன் ஆஜரானார்.
இந்த வழக்கில் ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீஸாரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் வாளையார் மனோஜ் மட்டும் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.
இந்நிலையில், மாவட்ட நீதிபதி முரளிதரன் விடுப்பில் சென்றிருந்ததால், மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கின் விசாரணையை அக். 16-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.
இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக். 16-ம் தேதி நடைபெற உள்ளது.
