அமைச்சர் மரிய வில்சனை விசாரிக்க வேண்டும்: அன்பில் மகேஷ்


 சென்னை: அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்த லஞ்சம் தொடர்பான கருத்து குறித்து அவரை விசாரிக்க வேண்டும் என முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.


தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, அமைச்சர் மரிய வில்சன் தனது பள்ளிக்கு அங்கீகாரம் பெறுவதற்காக லஞ்சம் வழங்கியதாக தெரிவித்திருந்தார்.


இதுதொடர்பாக பேசிய அன்பில் மகேஷ், அமைச்சராக இருக்கும் ஒருவர் லஞ்சம் கொடுத்ததாக கூறுவது கவனிக்க வேண்டிய விஷயம் என்றும், இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.


அமைச்சர் மரிய வில்சன் கூறிய தகவல்களின் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


மேலும், இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Previous Next

نموذج الاتصال