விமானி கஞ்சா போதையில் இருந்ததாக தகவல்: ஏர் இந்தியா விமானத்தில் பரபரப்பு

 

புதுடெல்லி: கடந்த 4-ம் தேதி தாய்லாந்தின் புக்கேட் நகரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், தலைமை விமானி கஞ்சா போதையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த விமானத்தில் 137 பயணிகள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 8 ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர்.


நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென 300 அடிக்கும் கீழாக இறங்கியதாக கூறப்படுகிறது. இதனால் விமானம் குலுங்கி நிலைதடுமாறியுள்ளது.


இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 13 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் காயமடைந்தனர்.


இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில், விமானத்தின் தலைமை விமானி கஞ்சா போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


எனினும், தலைமை விமானி கஞ்சா போதையில் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பாக விமானப் போக்குவரத்துத் துறை சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.


சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் விமானியின் மருத்துவப் பரிசோதனை குறித்த கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Next

نموذج الاتصال