செங்கடலில் இந்தியக் கொடி கப்பல் மீது தாக்குதல்

 செங்கடல் பகுதியில் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கொடி ஏற்றிய சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஏமன் கடற்கரை அருகே சென்றுகொண்டிருந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதலால் கப்பலில் சேதம் ஏற்பட்டதுடன், பின்னர் அது மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கப்பலில் இருந்த 14 பணியாளர்களில் 13 பேர் இந்தியர்கள் ஆவர். அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தாக்குதலை இந்திய அரசு கடுமையாக கண்டித்துள்ளது. சர்வதேச வர்த்தக கப்பல்கள் மற்றும் அப்பாவி கடலோடிகளை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் ஏற்க முடியாதவை என்றும், கடல்சார் போக்குவரத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.


மீட்பு நடவடிக்கையில் அப்பகுதி கடலோர பாதுகாப்பு அமைப்புகள் முக்கிய பங்காற்றியதாகவும், மீட்கப்பட்ட பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செங்கடல் மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு சூழலை இந்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், இந்தியக் கப்பல்கள் மற்றும் இந்திய கடலோடிகளின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Previous Next

نموذج الاتصال