கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண் கொலை: 7 மாதங்களுக்கு பின் காதலன் கைது

 

டெல்லி: கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவரது காதலனை டொராண்டோ போலீஸார் கைது செய்துள்ளனர்.


டொராண்டோவில் வசித்து வந்த 30 வயதான இமான்ஷி குரானா, கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி இரவு திடீரென மாயமானார். இதையடுத்து போலீஸார் அவரைத் தீவிரமாக தேடி வந்தனர்.


மறுநாள் காலை அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இமான்ஷி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.


போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், இமான்ஷியின் காதலனான 32 வயது அப்துல் கபூரி கொலைக்கு காரணமானவர் என தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நாடு தழுவிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.


இதனிடையே, சம்பவத்துக்கு கடும் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்த டொராண்டோ இந்தியத் தூதரகம், உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து இமான்ஷியின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்கியது.


வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த அப்துல் கபூரியை சர்வதேச காவல் அமைப்புகளின் உதவியுடன் டொராண்டோ சிறப்புக் காவல் படையினர் கண்டறிந்தனர்.


இரு தினங்களுக்கு முன்பு அவர் டொராண்டோ விமான நிலையத்துக்கு வந்தடைந்தபோது போலீஸார் அவரை கைது செய்தனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Previous Next

نموذج الاتصال