புதுடெல்லி:
சாம்சங் நிறுவனம் தனது புதிய Galaxy Watch Ultra2 மற்றும் Galaxy Watch9 ஸ்மார்ட்வாட்ச்களுக்கான முன்பதிவை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
Galaxy Watch Ultra2 வெளிப்புற சாகசங்கள் மற்றும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவோருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அதிக திறன் கொண்ட பேட்டரி, பிரகாசமான திரை, புதிய Snapdragon Wear Elite செயலி, Trail Run உள்ளிட்ட மேம்பட்ட உடற்பயிற்சி அம்சங்கள் மற்றும் AI அடிப்படையிலான உடல்நல கண்காணிப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
Galaxy Watch9, தினசரி உடல்நல கண்காணிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தூக்கத் தரம், இதய நலம், உடற்பயிற்சி, உடல் மீட்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நல தகவல்களை AI தொழில்நுட்பத்தின் மூலம் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளாக வழங்கும் வசதி இதில் இடம்பெற்றுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு முன்பதிவு சலுகைகளையும் சாம்சங் அறிவித்துள்ளது. வங்கி கேஷ்பேக், மேம்படுத்தும் (Upgrade) சலுகை, Galaxy சாதனங்களுடன் இணைந்து வாங்குபவர்களுக்கு கூடுதல் தள்ளுபடி, 24 மாதங்கள் வரை வட்டியில்லா தவணை வசதி மற்றும் அணிகலன்களுக்கான கூப்பன் சலுகைகள் வழங்கப்படுகின்றன. பொதுவிற்பனை ஆகஸ்ட் 7 முதல் தொடங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.