உச்சநீதிமன்ற விசாரணை வீடியோக்களை பகிர தற்காலிக தடை

 

புதுடெல்லி:


உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நேரலை நீதிமன்ற விசாரணைகளின் ஆடியோ, வீடியோ பதிவுகளை அனுமதியின்றி பதிவிறக்கம் செய்தல், தொகுத்தல், பகிர்தல், பதிவேற்றம் செய்தல் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்புதல் ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.


நீதிமன்ற விசாரணைகளின் குறுந்துணுக்குகள் சூழலுக்கு புறம்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதால், நீதித்துறையின் நம்பகத்தன்மை மற்றும் விசாரணையின் உண்மையான நோக்கம் பாதிக்கப்படுவதாக நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.


உச்சநீதிமன்றம் அல்லது சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தின் முன் அனுமதி இல்லாமல் நீதிமன்ற விசாரணைகளின் ஆடியோ அல்லது வீடியோ காட்சிகளை எந்தவொரு சமூக ஊடக தளத்திலும் அல்லது டிஜிட்டல் ஊடகங்களிலும் பகிரவோ, மறுபதிவேற்றம் செய்யவோ, பரப்பவோ கூடாது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதே நேரத்தில், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த செய்திகளை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதற்கு இந்த இடைக்கால உத்தரவு எந்தவிதத் தடையும் ஏற்படுத்தாது என்றும், நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ நடைமுறைகள் மற்றும் செய்தி வெளியீடுகள் வழக்கம்போல் தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

Previous Next

نموذج الاتصال