சென்னை:
சென்னையில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக வளாகத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.
தமிழகத்தில் உலகத் தரமான உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை சர்வதேச கல்வி மையமாக மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வளாகத்தின் மூலம் மாணவர்களுக்கு சர்வதேச தரத்திலான கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் உருவாகும். மேலும், தொழில்துறை–கல்வி நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் வகையில் இந்த முயற்சி அமையும்.
ஒப்பந்தத்தின் மூலம் புதுமை, ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உலகளாவிய கல்வி இணைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு புதிய கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை உயர்கல்வி, புதுமை மற்றும் முதலீட்டின் முன்னணி மையமாக மாற்றும் அரசின் முயற்சியில் இந்த ஒப்பந்தம் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.