லடாக்கில் நாட்டின் முதல் புவிவெப்ப ஆற்றல் கிணறுகள் திறப்பு: வெந்நீரூற்றில் இருந்து மின்சாரம் உற்பத்தி

 

லே: லடாக்கின் புகா (Puga) பள்ளத்தாக்கில் நாட்டின் முதல் புவிவெப்ப (Geothermal) ஆற்றல் கிணறுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இயற்கையாக வெளிப்படும் வெந்நீரூற்றுகளின் வெப்ப ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்தியாவின் முதல் முயற்சியாக இது அமைந்துள்ளது.


இந்த திட்டத்தின் கீழ், சுமார் 1,000 மீட்டர் ஆழம் கொண்ட இரண்டு புவிவெப்ப கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஆழமான புவிவெப்ப கிணறுகளாகவும், உலகின் மிக உயரமான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புவிவெப்ப திட்டங்களில் ஒன்றாகவும் இவை கருதப்படுகின்றன.


எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ONGC) எரிசக்தி மையம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆரம்ப கட்டமாக 1 மெகாவாட் திறன் கொண்ட மின்நிலையம் அமைக்கப்பட்டு, எதிர்காலத்தில் பெரிய அளவில் புவிவெப்ப மின்சார உற்பத்தியை விரிவுபடுத்தும் திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது.


சுற்றுச்சூழலுக்கு உகந்த தூய்மையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிப்பதுடன், தொலைதூர மலைப்பகுதிகளில் நிலையான மின்சார விநியோகத்தை உறுதிசெய்யும் முக்கிய முயற்சியாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது.

Previous Next

نموذج الاتصال