சென்னை இஸ்கான் கோவிலில் ஜெகந்நாதர் ரதயாத்திரை கோலாகலம்

 

சென்னை: கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள சென்னை இஸ்கான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்ரீ ஜெகந்நாதர் ரதயாத்திரை விழா பக்தர்களின் திரளான பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.


ஸ்ரீ ஜெகந்நாதர், பலராமர் மற்றும் சுபத்ரா தேவி எழுந்தருளிய அலங்கரிக்கப்பட்ட தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கங்களுடன் இழுத்துச் சென்றனர். ஹரே கிருஷ்ணா நாம சங்கீர்த்தனம், பக்திப் பாடல்கள், ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ரதயாத்திரை சின்ன நீலாங்கரையில் தொடங்கி, இஸ்கான் சென்னை கோவிலில் நிறைவடைந்தது.


விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மகாபிரசாதம் வழங்கப்பட்டதுடன், ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


ஜெகந்நாதர் ரதயாத்திரை பக்தி, ஒற்றுமை மற்றும் இறை அருளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய ஆன்மிக விழாவாகக் கருதப்படுகிறது. சென்னை இஸ்கான் கோவில் சார்பில் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

Previous Next

نموذج الاتصال