தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக லயோலா மணி நியமனம்

 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் விஜய் லயோலா மணிக்கு நியமன ஆணையை வழங்கினார். அப்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உடனிருந்தார்.

புதியதாக நியமிக்கப்பட்டுள்ள லயோலா மணி, தமிழக வெற்றிக் கழகத்தின் பேச்சாளராகவும், கொள்கை பரப்பு இணைச் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை தயாரித்தல், அச்சிடுதல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வது உள்ளிட்ட முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக, கடந்த ஆட்சிக் காலத்தில் ஆசிரியரும் பட்டிமன்றப் பேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி, இந்த கழகத்தின் தலைவராக பணியாற்றியிருந்தார். ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தற்போது புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Previous Next

نموذج الاتصال