வீட்டு சமையல் எரிவாயுவுக்கு மாற்றாக எத்தனால்: மத்திய அரசு புதிய திட்டம்

 புதுடெல்லி: வீட்டு சமையலுக்கான எரிபொருளாக பயன்படுத்தப்படும் எல்பிஜி (LPG) சிலிண்டருக்கு மாற்றாக எத்தனாலை (Ethanol) பயன்படுத்தும் திட்டத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.


இந்த திட்டத்திற்கான கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், எத்தனாலை வீட்டு சமையல் எரிபொருளாக பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தேவையான பாதுகாப்பு மற்றும் விநியோக நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பை குறைப்பது, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று எரிபொருளை ஊக்குவிப்பது மற்றும் உயிரி எரிபொருள் பயன்பாட்டை அதிகரிப்பது ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகக் கூறப்படுகிறது.


எத்தனால் ஏற்கனவே வாகன எரிபொருளில் கலவையாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது அதை வீட்டு சமையலிலும் பயன்படுத்தும் வாய்ப்புகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், எல்பிஜியுடன் இணைந்து மாற்று சமையல் எரிபொருள் தேர்வாக எத்தனால் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது.


Previous Next

نموذج الاتصال