சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்: குகேஷை வீழ்த்தி முன்னிலை நீட்டித்தார் அலிரெசா ஃபிரூஸ்ஜா

 சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2026 சர்வதேச செஸ் தொடரில், உலக சாம்பியன் டி. குகேஷை பிரான்ஸ் கிராண்ட்மாஸ்டர் அலிரெசா ஃபிரூஸ்ஜா வீழ்த்தி, போட்டியின் முன்னிலையை மேலும் வலுப்படுத்தினார்.


கிளாசிக்கல் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் துல்லியமான நகர்வுகளை வெளிப்படுத்திய ஃபிரூஸ்ஜா, குகேஷுக்கு எதிராக வெற்றி பெற்று முழு புள்ளியை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் அவர் புள்ளிப்பட்டியலில் தனி முன்னிலை பெற்றார்.


மற்றொரு முக்கிய ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டர் நிஹால் சரின், அமெரிக்க வீரர் ஹான்ஸ் நீமனை எதிர்த்து நீண்ட நேரம் போராடி ஆட்டத்தை டிராவில் முடித்தார். வெற்றி வாய்ப்பு இருந்தபோதிலும், அதை பயன்படுத்த முடியாமல் ஹான்ஸ் நீமன் தொடர்ந்து இரண்டாவது ஆட்டத்திலும் சமநிலைக்கே சம்மதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


ஜூலை 16 முதல் 22 வரை சென்னை வேளச்சேரியில் நடைபெற்று வரும் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2026 தொடரில் உலகின் முன்னணி செஸ் வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.


Previous Next

نموذج الاتصال