புதுடெல்லி:
டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்கக் கூடாது என பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்ட அறிவுறுத்தலுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் ஜனநாயக நாட்டின் முக்கிய அங்கமாக இருப்பதாகவும், அமைதியான முறையில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவது அவர்களின் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை என்றும் அவர் வலியுறுத்தினார்.
போராட்டங்களில் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை மாணவர்களை அச்சுறுத்தும் முயற்சியாகும் என்றும், கல்வி நிலையங்கள் கருத்துச் சுதந்திரத்தையும் ஜனநாயக மதிப்புகளையும் பாதுகாக்க வேண்டுமே தவிர அவற்றை கட்டுப்படுத்தக் கூடாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
மாணவர்களின் உரிமைகள், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக மதிப்புகளை மதிக்கும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.