தேர்வு சீர்திருத்த உயர்மட்ட குழுவுக்கு நந்தன் நிலேகனி தலைவர்

 

நாட்டின் தேர்வு முறையை மேலும் வெளிப்படையாகவும் நம்பகத்தன்மையுடனும் தொழில்நுட்ப அடிப்படையிலும் மாற்றும் நோக்கில் உயர்மட்ட தேர்வு சீர்திருத்த பணிக்குழுவை அமைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.


இந்த உயர்மட்ட குழுவுக்கு இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வு முறைமையில் தேவையான கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை ஆய்வு செய்து, விரிவான பரிந்துரைகளை வழங்குவது குழுவின் முக்கிய பொறுப்பாக இருக்கும்.


பொதுத் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உயர்த்துவது, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க வலுவான அமைப்பை உருவாக்குவது, தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்துவது மற்றும் மாணவர்களுக்கு வெளிப்படையான தேர்வு நடைமுறையை உறுதி செய்வது உள்ளிட்ட அம்சங்களில் இந்தக் குழு கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். தேர்வு முறையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தக் குழுவின் பரிந்துரைகள் பயன்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


நந்தன் நிலேகனி தலைமையிலான இந்த உயர்மட்ட குழு தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்த பிறகு, அவற்றின் அடிப்படையில் தேர்வு முறையில் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Next

نموذج الاتصال