குன்றத்தூரில் ரவுடியை காலில் சுட்டுப் பிடித்த போலீஸார்

சென்னை: குன்றத்தூர் அருகே போலீஸாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற பிரபல ரவுடியை போலீஸார் தற்காப்பு நடவடிக்கையாக காலில் சுட்டுப் பிடித்தனர்.

ரகசிய தகவலின் அடிப்படையில், பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஏ+ பிரிவு ரவுடி கருப்பு என்ற தமிழழகு மற்றும் அவரது கூட்டாளியை கைது செய்ய திருமுடிவாக்கம் போலீஸார் சென்றனர்.

போலீஸார் அவர்களை சுற்றிவளைத்தபோது, தமிழழகு அரிவாளால் தலைமை காவலர் விஜயகுமாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்பு நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் மணிகண்டன் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டார். காயமடைந்த தமிழழகும், தாக்குதலில் காயமடைந்த காவலரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்தில் இருந்த மற்றொரு நபரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு மற்றும் இதன் பின்னணியில் வேறு யாரேனும் தொடர்புடையவர்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Previous Next

نموذج الاتصال