மோடி அரசை விவசாயிகளும் மாணவர்களும் முற்றுகையிடுவார்கள்: ராகேஷ் திகாயத்துடன் சந்திப்புக்கு பின் சிஜேபி நம்பிக்கை

 

மத்திய அரசுக்கு எதிரான மாணவர் போராட்டத்திற்கு விவசாயிகளின் ஆதரவும் வலுப்பெற்று வருவதாக காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) தெரிவித்துள்ளது.


விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாயத்தை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிஜேபி நிர்வாகிகள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.


கல்வி, வேலைவாய்ப்பு, தேர்வு முறைகேடுகள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்றும், பல்வேறு சமூகப் பிரிவுகள் ஒன்றிணைந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.


ராகேஷ் திகாயத்தும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மாணவர்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து செயல்பட்டால், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணிக்க முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்ததாக சிஜேபி நிர்வாகிகள் கூறினர்.


நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்து போராட்டங்களில் பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சிஜேபி தெரிவித்துள்ளது.

Previous Next

نموذج الاتصال