மதுரை மெட்ரோ நிராகரிப்பு: அரசியலா, அலட்சியமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி

 

மதுரை:


மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காத விவகாரம் குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.


மதுரை போன்ற வேகமாக வளர்ந்து வரும் நகரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் அவசியமான உள்கட்டமைப்பு திட்டமாகும். நகரின் மக்கள் தொகை, தினசரி போக்குவரத்து நெரிசல், சுற்றுப்புற பகுதிகளிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் அரசியல் நோக்கமா அல்லது நிர்வாக அலட்சியமா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து தாமதப்படுத்தப்படுவது ஏமாற்றமளிப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மதுரை நகரின் எதிர்கால வளர்ச்சி, தொழில் முதலீடு, வேலைவாய்ப்பு, சுற்றுலா மற்றும் பொதுப் போக்குவரத்து மேம்பாட்டுக்கு மெட்ரோ திட்டம் முக்கிய பங்காற்றும் என்றும், இதுபோன்ற திட்டங்களை விரைவாக செயல்படுத்துவது காலத்தின் தேவையாகும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மதுரை மற்றும் கோயம்புத்தூருக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Next

نموذج الاتصال