பேப்பர் லீக் தடுப்பு சட்டம் வரலாற்றுச் சாதனை: பிரதமர் மோடி

 புதிய தில்லி: பொதுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவைத் தடுக்க கொண்டு வரப்பட்ட திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று, அது இந்தியாவின் தேர்வு முறையில் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க அரசு உறுதியாக செயல்படுவதாகக் கூறினார்.


நாட்டில் பல ஆண்டுகளாக பொதுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் மாணவர்களின் நம்பிக்கையை பாதித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், புதிய சட்டத்தின் மூலம் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


மேலும், இந்த சட்டம் நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்வு முறையை உருவாக்க உதவும் என்றும், மாணவர்களின் கடின உழைப்புக்கு உரிய மதிப்பு கிடைப்பதை உறுதி செய்யும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.


பொதுத் தேர்வுகளின் நம்பகத்தன்மையை பாதுகாக்கவும், முறைகேடுகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவும் அரசு தொடர்ந்து செயல்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.


இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் அரசின் முயற்சியாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


Previous Next

نموذج الاتصال