பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாக்க வேண்டும்: முதல்வர் விஜய்க்கு அன்புமணி வலியுறுத்தல்

 சென்னை: சென்னை நகரின் இயற்கை வெள்ளத் தடுப்பு அமைப்பாக விளங்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை உடனடியாக முழுமையாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முதலமைச்சர் விஜயை வலியுறுத்தியுள்ளார்.


வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கரணை சதுப்புநிலம் நகரின் முக்கியமான ஈரநிலப் பகுதிகளில் ஒன்றாகும். இதன் எல்லைகளை அதிகாரப்பூர்வமாக வரையறுத்து பாதுகாக்கப்பட்ட ஈரநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், சதுப்புநிலத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், எதிர்காலத்தில் எந்தவித கட்டுமானங்களும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


பள்ளிக்கரணை சதுப்புநிலம் சென்னையின் வெள்ள அபாயத்தை குறைக்கும் இயற்கை பாதுகாப்பு அமைப்பாக இருப்பதால், அதை பாதுகாப்பது சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் மிகவும் அவசியம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Uploading: 1486848 of 2832934 bytes uploaded.

Previous Next

نموذج الاتصال