வருமான வரித்துறை அதிகாரிகள் நாட்டின் நிதி ஆரோக்கியத்தின் காவலர்கள்: துணைநிலை ஆளுநர்

 

புதுச்சேரி:


வருமான வரித்துறை அதிகாரிகள் நாட்டின் நிதி ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முக்கிய காவலர்களாக செயல்படுகின்றனர் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.


வருமான வரித்துறை தின விழாவில் பங்கேற்று பேசிய அவர், வரி வசூல் என்பது அரசின் வருவாயை உயர்த்தும் நடவடிக்கை மட்டுமல்ல; நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிதி ஒழுங்கு மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் முக்கிய பொறுப்பாகும் என்றார்.


நேர்மையான வரி செலுத்தும் பண்பாட்டை ஊக்குவிப்பதிலும், வரி ஏய்ப்பை தடுப்பதிலும் வருமான வரித்துறை அதிகாரிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். மக்களின் நம்பிக்கையைப் பெற்று, சட்ட விதிகளுக்கு இணங்க செயல்படுவது வருமான வரித்துறையின் கடமையாகும் என்றும் தெரிவித்தார்.


நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த வரி வருவாய் மிக முக்கியமான அடித்தளமாக இருப்பதாகவும், அதனை உறுதிப்படுத்தும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் பாராட்டினார்.

Previous Next

نموذج الاتصال