மாணவர் போராட்டம் எதிரொலி: உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷி பணியிட மாற்றம்

 

புதுடெல்லி:


நாடு முழுவதும் மாணவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்கள் மற்றும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் தொடர்பான சர்ச்சைகளின் பின்னணியில், மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


மத்திய அரசின் உயர்மட்ட நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வினீத் ஜோஷி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் பால் கங்க்வார் புதிய உயர்கல்வித் துறை செயலாளராக பொறுப்பேற்க உள்ளார்.


நீட் உள்ளிட்ட தேசிய நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள், மாணவர்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும் கோரிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த நிர்வாக மாற்றம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


தேர்வு முறையை மேலும் பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மையுடனும் நடத்துவதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், கல்வி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Previous Next

نموذج الاتصال