மேற்கு ஆசியப் போர் எதிரொலி: 26,000 விமானங்கள் ரத்து

 

புதுடெல்லி:


மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் மற்றும் பல்வேறு நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய விமான நிறுவனங்கள் ஜூலை 20-ம் தேதி வரை சுமார் 26,000 சர்வதேச விமான சேவைகளை ரத்து செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணையமைச்சர் அளித்த பதிலில், போர் காரணமாக பல முக்கிய வான்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ளதால், விமானங்கள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


இதன் காரணமாக விமானப் பயண நேரம் கணிசமாக அதிகரித்துள்ளதுடன், எரிபொருள் செலவு மற்றும் செயல்பாட்டு செலவுகளும் உயர்ந்துள்ளன. மேலும், விமான நிறுவனங்கள் வருவாய் இழப்பையும் சந்தித்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.


பயணிகளின் பாதுகாப்பே அரசின் முதன்மை என்பதால், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து தேவையான வழிகாட்டுதல்களை விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் பதற்றம் தொடரும் வரை விமான சேவைகளில் மாற்றங்கள், தாமதங்கள் மற்றும் ரத்துகள் ஏற்படக்கூடும் என்பதால், சர்வதேச பயணிகள் தங்களது விமான சேவை நிலவரத்தை முன்கூட்டியே சரிபார்த்து பயணம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous Next

نموذج الاتصال