இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மத்தியப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு வாரியம் (ICRB) மூலம் 242 நிர்வாகப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உதவியாளர் (Assistant), மேல் நிலை எழுத்தர் (Upper Division Clerk - UDC), இளநிலை தனிநபர் உதவியாளர் (Junior Personal Assistant - JPA) மற்றும் ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பணியிடங்களுக்கு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் திறன் உள்ளிட்ட கூடுதல் தகுதிகளும் அவசியமாகும்.
தேர்வர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் ஆவணச் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்கள் நாடு முழுவதும் உள்ள இஸ்ரோ மையங்கள் மற்றும் விண்வெளித் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 16 என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதிகள், வயது வரம்பு, இடஒதுக்கீடு, தேர்வு முறை மற்றும் பிற விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்து, தகுதியானவர்கள் காலக்கெடுவிற்குள் விண்ணப்பிக்குமாறு இஸ்ரோ அறிவுறுத்தியுள்ளது.