2027 கேட் தேர்வை ஐஐடி மெட்ராஸ் நடத்துகிறது

 சென்னை: 2027-ஆம் ஆண்டுக்கான பொறியியல் பட்டதாரி திறனாய்வு நுழைவுத் தேர்வான கேட் (GATE) தேர்வை இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) மெட்ராஸ் நடத்த உள்ளது.


இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வு அட்டவணை, பாடத்திட்டம், பதிவு நடைமுறை மற்றும் முக்கிய அறிவிப்புகள் கட்டம் கட்டமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பதிவு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தத் தேர்வு 2027 பிப்ரவரி மாதத்தில் கணினி வழி (CBT) முறையில் பல கட்டங்களாக நடைபெற உள்ளது. முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கும், பொதுத்துறை நிறுவனங்களில் பணியமர்த்தலுக்கும் கேட் மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுகின்றன.


மேலும், இந்த ஆண்டு ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் தொடர்பான புதிய பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், சில பாடங்களின் பாடத்திட்டமும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous Next

نموذج الاتصال