திருமலை:
திருமலை ஸ்ரீவாரி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள புனித புஷ்கரணி குளத்தில் பக்தர்கள் நீராடுவதற்கு ஆகஸ்ட் 1 முதல் தற்காலிக தடை விதிக்கப்பட உள்ளது.
புஷ்கரணி குளத்தில் தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை பக்தர்கள் குளத்தில் இறங்கி நீராட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இக்காலகட்டத்தில் புஷ்கரணி குளத்தின் நீர் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் பக்தர்களின் நீராடும் வசதி மீண்டும் வழக்கம்போல் தொடங்கப்படும்.
பக்தர்கள் தேவஸ்தான நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஒத்துழைக்குமாறும், கோயில் தரிசனம் மற்றும் பிற வழிபாட்டு நடைமுறைகள் வழக்கம்போல நடைபெறும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.