1958 உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஜெர்சி ரூ.47 கோடிக்கு ஏலம்

 பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, 1958-ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அணிந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க எண் 10 ஜெர்சி, சுமார் ரூ.47.2 கோடிக்கு (4.9 மில்லியன் அமெரிக்க டாலர்) ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.


அமெரிக்காவின் சோத்பீஸ் (Sotheby's) ஏல நிறுவனத்தில் நடைபெற்ற இந்த ஏலத்தில், பீலேவின் ஜெர்சி கால்பந்து வரலாற்றில் இரண்டாவது அதிக விலைக்கு விற்கப்பட்ட ஜெர்சியாக சாதனை படைத்துள்ளது.


1958 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்வீடனை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் தனது முதல் உலகக் கோப்பையை வென்றது. அப்போது வெறும் 17 வயதான பீலே இரண்டு கோல்கள் அடித்து உலக கால்பந்தில் புதிய வரலாறு படைத்தார்.


பீலே 1958, 1962 மற்றும் 1970 ஆகிய மூன்று உலகக் கோப்பைகளை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் அணிந்த இந்த ஜெர்சி, கால்பந்து ரசிகர்களிடையே மிகவும் அரிய நினைவுப் பொருளாகக் கருதப்படுகிறது.


Previous Next

نموذج الاتصال