10 நாட்களில் 6 முதியோர் கொலை: சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு என நயினார் குற்றச்சாட்டு

 

சென்னை:


தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் ஆறு முதியோர் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியாக வசிக்கும் முதியவர்கள் தொடர்ந்து குற்றவாளிகளின் இலக்காக மாறி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.


முதியோர்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும், தொடர்ச்சியாக நடைபெறும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் காவல்துறையின் செயல்பாடு குறித்து கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் கூறினார்.


குற்றச் சம்பவங்களைத் தடுக்க மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


மேலும், குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுத்து, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலையை உறுதிப்படுத்த அரசு செயல்பட வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Previous Next

نموذج الاتصال