No results found

    மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் பலர் கண்ணெதிரில் மாணவி கொலை


    மத்திய பிரதேச மாநிலம், நரசிங்பூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி சந்தியா சவுத்ரி. இவர் கடந்த 27-ம் தேதி மாவட்ட மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை பார்க்கச் சென்றார். அங்கு வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் சந்தியா அதே இடத்தில் உயிரிழந்தார்.

    இதுகுறித்து நரசிங்பூர் எஸ்.பி. மிருககி டேகா கூறுகையில், “இந்த சம்பவத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார். அபிஷேக் கோஸ்டி என்ற அந்த இளைஞனும் சந்தியாவும் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி காதலித்து வந்துள்ளனர். கடந்த ஜனவரியில் வேறு ஒருவருடன் சந்தியாவை அபிஷேக் பார்த்துள்ளார். இதனால் சந்தியாவை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ள அபிஷேக் திட்டமிட்டார். ஆனால் அவரது தற்கொலை முயற்சி தோல்வி அடைந்தது’’ என்றார்.

    Previous Next

    نموذج الاتصال