No results found

    கதாநாயகியாக அறிமுகமாகிறார் மோகன்லால் மகள்!


    மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் இருப்பவர் மோகன்லால். தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவருடைய மகன் பிரணவ் மோகன்லால் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், மோகன்லால் மகள் விஸ்வமயா நாயகியாக அறிமுகமாகிறார். ‘2018’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி அடுத்து இயக்கும் படம் ‘துடக்கம்’. இதில், விஸ்வமயா நாயகியாக அறிமுகமாகிறார். இதை ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.

    சினிமாவில் அறிமுகமாகும் தனது சகோதரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரணவ் மோகன்லால், ‘‘சினிமா உலகில் என் சகோதரி முதல் அடியை எடுத்து வைக்கிறாள். இது பெருமையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال