No results found

    இயக்குநர் புகார்: நடிகை மினு முனீர் கைது


    மலையாள நடிகையான மினு முனீர், கடந்த ஆண்டு ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து இயக்குநரும் நடிகருமான பாலச்சந்திர மேனன் மீதும் பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

    மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்த பாலச்சந்திர மேனன், தமிழில் 'தாய்க்கு ஒரு தாலாட்டு' என்ற படத்தை இயக்கியுள்ளார். நடிகை மினு முனீரின் புகாரை மறுத்த அவர், மினு முனீர் மீது காவல் நிலையத்தில் அவதூறு புகார் அளித்தார்.

    இதையடுத்து மினு முனீர் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மினு முனீரை கொச்சி போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

    Previous Next

    نموذج الاتصال