No results found

    இந்தியாவை கண் நோயான ‘டிராக்கோமா’ இல்லாத நாடாக WHO அறிவித்துள்ளது: பிரதமர் பேச்சு


    உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை கண் நோயான டிராக்கோமா இல்லாத நாடாக அறிவித்துள்ளது என்று ‘மன் கி பாத்’ உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

    மாதம்தோறும் பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் மக்களுடன் வானொலி வழியாக உரையாடி வருகிறார். இன்று இந்த நிகழ்ச்சியின் 123-வது அத்தியாயத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை கண் நோயான டிராக்கோமா இல்லாத நாடாக அறிவித்துள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது நமது சுகாதார ஊழியர்களின் வெற்றி. 'ஜல் ஜீவன்' மிஷன் இதற்கு பங்களித்துள்ளது.

    ஜெனீவாவில் நடந்த 78-வது உலக சுகாதார மாநாட்டில், உலக சுகாதார அமைப்பால் (WHO) பொது சுகாதாரப் பிரச்சினையாக டிராக்கோமாவை நீக்குவதற்கான சான்றிதழ் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில், இந்திய அரசு டிராக்கோமாவை பொது சுகாதாரப் பிரச்சினையாக நீக்கியதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

    தென்கிழக்கு ஆசியாவில் இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது நாடாகவும் இந்தியா உருவாகியுள்ளது. டிராக்கோமாவை ஒழிப்பதற்காக பார்வையிழப்பு மற்றும் பார்வைக் குறைபாட்டை (NPCBVI) கட்டுப்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் கீழ் நமது அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.” என்றார்.

    மேலும். “கடந்த ஜூன் 21 அன்று, நம் நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். இந்த கொண்டாட்டங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. 10 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் நமது பாரம்பரியம் முன்பை விட பிரமாண்டமாக மாறியுள்ளது. மிக அதிகமான மக்கள் தங்கள் வாழ்க்கையில் யோகாவை இணைத்துக்கொள்வதை இது குறிக்கிறது" என்றார்

    தொடர்ந்து பேசிய அவர், “ நீண்ட காலத்திற்குப் பிறகு கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்குகிறது. இது பக்தர்களுக்கு சிறந்த தருணமாகும். ஜூலை 3 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ளது. இந்த யாத்திரைகளில் ஈடுபடவிருப்பவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.” என்று கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال