No results found

    தாம்பத்தியத்தின் போது இந்திய பெண்கள் அவமானமாக நினைக்கும் 6 விஷயங்கள்!


    தாம்பத்தியத்தை பொறுத்தவரை ஆண்கள், பெண்கள் மத்தியில் ஹார்மோன், உச்சம் எட்டும் முறை மட்டுமல்ல ஆசைகளும் கூட வேறுபாடும். ஆண்களின் பெரும்பாலும் உடல் ரீதியாகவும், பெண்கள் ஆசை பெரும்பாலும் மன ரீதியாகவும் தான் இருக்கும்.

    இந்திய ஆண்கள் பல தரவுகள் கண்டு ஏகபோக ஆசைகள் கொண்டிருப்பார்கள். ஆனால், இந்திய பெண்கள் அப்படியில்லை. வெளியே மார்டனாக இருந்தாலும் கூட இந்த விஷயத்தில் கொஞ்சம் ரிசர்வ் டைப்பாக தான் இருப்பார்கள்.

    எனவே, ஆண்கள் இந்த 6 விஷயங்களில் கொஞ்சம் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டியது அவசியம்...

    நிலைகள்!

    ஆண்கள் பல்வேறு நிலைகளில் உடலுறவில் ஈடுபட விரும்புவர்கள். ஆனால், பெண்கள் ஒருசில நிலைகளில் ஈடுபடுவது அசிங்கமாகவும், அது தவறானது எனவும் கருதி அவமானமாக உணர்வது உண்டு. ஆண்கள் இதை புரிந்து கொண்டு சரியாக நடந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

    டாய்ஸ்!

    மேற்கத்திய நாடுகளில் இருக்கும் அளவு இந்தியாவில் செக்ஸ் டாய்ஸ் பிரபலமும் கிடையாது, பயன்படுத்துவதும் கிடையாது. சில ஆண்கள் இதை பயன்படுத்த முற்படும் போது அதை இந்திய பெண்கள் அவமானமாக கருதுவது உண்டு.

    ஆபாசம்!

    சில ஆண்கள் பெண்களை உச்சம் அடைய வைக்கிறேன் என ஆபாசமாக பேசுவதுண்டு.சிலர் ஆபாச படங்களை காண்பிப்பதும் உண்டு. இது கணவன் - மனைவி உறவில் பெரிய தவறில்லை எனிலும், இந்திய பெண்களை இது அவமானமாக / அசௌகரியமாக உணர வைக்கிறது.

    வியர்வை!

    உடல் துர்நாற்றம் என்பது இயல்பான ஒன்று தான். சிலருக்கு வியர்வை சுரப்பி அதிகமாக சுரக்கும் இதனால், அவர்கள் குளித்து விட்டு உடலுறவில் ஈடுபட்டாலும் கூட துர்நாற்றம் வரும். பெரும்பாலும், தாம்பத்தியத்தின் போது தங்களிடம் இருந்து துர்நாற்றம் வெளிப்படுவதை பெண்கள் அவமானாக கருதுகிறார்கள். (ஆண்களிடம் இருந்து வெளிப்பட்டால் (அசௌகரியமாக கருதுவார்கள்).

    வெளிச்சம்!

    சில ஆண்கள் பற்பல படங்களை பார்த்துவிட்டு, வெளிச்சத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபட விரும்புவார்கள். ஆனால், 70% மேலான இந்திய பெண்களுக்கு அப்படி ஈடுபட பிடிப்பதில்லை. மேலும், இதை அவமானமாக கருதும் மனோபாவமும் கொண்டிருக்கிறார்கள்.

    உடை!

    சில ஆண்கள் முற்றிலுமாக உடைகளை அகற்றிய பிறகு தாம்பத்தியத்தில் ஈடுபட விரும்புவார்கள். கிராமப்புற பெண்கள் மட்டுமல்ல, சில நகர்ப்புற பெண்களுமே கூட இவ்வாறு தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது அசௌகரிய உணர்வுடனும், சங்கடமாகவும் கருதுகிறார்கள்.

    Previous Next

    نموذج الاتصال