No results found

    நெல்லையை வீழ்த்திய திருப்பூர் தமிழன்ஸ்!


    டிஎன்பிஎல் டி20 லீக் கிரிக்கெட் தொடரில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

    திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய திருப்பூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. சாய் கிஷோர் அதிரடியாக விளையாடி 55 ரன்கள் (34 பந்துகள். 8 பவுண்டரி. ஒரு சிக்ஸர்) குவித்தார்.

    பின்னர் விளையாடிய நெல்லை அணி 19.4 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி கண்டது. திருப்பூர் அணி சார்பில் டி.நடராஜன் 3, மோகன் பிரசாத் 2, சாய்கிஷோர், இசக்கிமுத்து, முகமது அலி, பிரதோஷ் ரஞ்சன் பால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    Previous Next

    نموذج الاتصال