No results found

    பெண்களை விட விரைவாக காதலில் விழும் ஆண்கள் - அதற்கு காரணமும் இருக்கு - ஆய்வு சொல்லும் ருசிகர முடிவு


    பெண்களை விட ஆண்களே சற்று அதிகமாக காதலில் விழுகின்றனர், ஆனால் பெண்கள் ஆண்களை விட தங்கள் துணையைப் பற்றி அதிகமாக கவலைப்படுகிறார்கள் என்று ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் (ANU) பாலின வேறுபாடுகளை ஆராயும் ஆய்வு தெரிவிக்கிறது.

    ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட இந்த Peer review மதிப்பாய்வில், ஆண்கள், பெண்களை விட சராசரியாக ஒரு மாதம் முன்னதாகவே காதலில் விழுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வின் ஆசிரியரும், ANU முனைவர் பட்ட மாணவருமான ஆடம் போடே கூறுகையில், "ஆண்கள் தங்கள் காதலியின் மனதை கவர தங்கள் அர்ப்பணிப்பைக் அதிகம் காட்ட வேண்டியிருப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம்" என்று தெரிவிக்கிறார்.

    ஆனால் பெண்கள் ஆண்களை விட தங்கள் அன்புக்குரியவர்களைப் பற்றி சிந்திப்பதில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال