No results found

    உடலுறவில் ஈடுபட உங்க துணைக்கு நாட்டமில்லையா? இந்த 4 காரணமா இருக்கலாம்!


    தாம்பத்தியம் என்பது இல்லறத்தின் ஒரு அங்கம். ஆரம்பத்தில் இருக்கும் ஈர்ப்பும், அணைப்பும் நாட்கள் செல்ல, செல்ல குறைவது இயல்பு. ஆனால், சிலரது இல்லற வாழ்க்கையில் முற்றிலுமாக தாம்பத்தியம் நடுவயதில் தடைப்பட்டு போவதும் உண்டு.

    இது இருவருக்கும் உடன்பட்டு நடந்தால் பிரச்சனை ஏதும் இல்லை. ஒருவேளை ஒருதலைப்பட்சமாக தாம்பத்தியத்தில் ஒருவர் மட்டும் பிடிவாதம் பிடித்தோ அல்லது விருப்பம் இன்றியோ இருந்தால் கண்டிப்பாக இயல்பான இல்லற வாழ்க்கையில் இதனால் பல பிரச்சனைகள் எட்டிப்பார்க்க தான் செய்யும்.

    தாம்பத்தியம் என்பது யோகாவிற்கு இணையாக மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறது என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், மன அழுத்தம் அதிகரிக்காமல் இருக்கவும் தாம்பத்திய உறவு உதவுகிறது.

    இதில், தடை ஏற்படுவது, விருப்பமின்றி இருப்பது, தாம்பத்தியம் இல்லாத இல்லறத்தில் நீடிப்பது போன்ற சிக்கலில் இருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும் என இனிக் காணலாம்....

    மருத்துவ பரிசோதனை!

    நீரிழிவு, உடல் பருமன் ஹார்மோன் சமநிலை இன்மை போன்ற உடல்நல குறைபாடுகளால் கூட தாம்பத்திய உறவில் நாட்டம் இல்லாமல் போகலாம். மேலும், மன அழுத்தம் காரணமாக கூட சில தாம்பத்திய உறவை தவிர்க்கலாம்.

    எனவே, நீண்ட நாட்கள் தாம்பத்திய உறவு இல்லாமல் இல்லறம் நடந்து வருகிறது எனில், மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

    நம்பகம்!

    உறவில் நம்பகத்தன்மை குறைந்துவிட்டாலும் கூட தாம்பத்திய உறவில் ஈடுபட நாட்டம் இருக்காது. வேண்டாத சந்தேகங்கள், நடத்தை போன்றவை கூட இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.

    எனவே, கணவன், மனைவி இருவரும் நேரம் ஒதுக்கி ஒருவருடன், ஒருவர் மனம் திறந்து பேச வேண்டியது அவசியம்.

    ரொமான்ஸ் முக்கியம்!

    இத்தனை வயது வரை தான் ரொமான்ஸ் செய்ய வேண்டும், இந்த வயதுக்கு மேல் ரொமான்ஸ் செய்யக் கூடாது என்பதில்லை. இந்த எல்லை கோட்டை முதலில் அழியுங்கள்.

    கட்டியணைத்து கொள்வது, முத்தமிட்டுக் கொள்வது, கொஞ்சிக் கொள்வது எல்லாம் உங்கள் உறவில் இறுக்கம் மற்றும் இணக்கம் குறையாமல் இருக்க பாதுகாக்கும் கருவிகள். இதை அழித்து விட வேண்டாம்.

    ஆலோசனை!

    ஆலோசகர், நெருக்கமான நண்பர்கள், நம்பகமான உறவினர்களிடம் இதுக்குறித்து பேசலாம். ஆனால், அவர் இதை வெளியே யாரிடமும் கூற மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    இதன் மூலம் ஏதேனும் யோசனை அல்லது கருத்து கிடைக்கும். அதன் மூலம், உங்கள் உறவில் தாம்பத்தியத்தை மீண்டும் மீட்டெடுக்க முடியும். இன்பமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.

    குறிப்பு!

    சில ஆண்கள் / பெண்கள் ஆன்மிகம் அல்லது வேறு சில பர்சனல் காரணங்களால் ஒரு வயதுக்கு பிறகு உடலுறவில் ஈடுபட நாட்டம் செலுத்து மாட்டார்கள். இதற்கு எந்தவொரு ஆரோக்கிய குறைபாடோ காரணமாக இல்லாமல் கூட இருக்கலாம். இது மன ரீதியான ஒன்று.

    இப்படிப்பட்ட தருணத்தில் அவர்களை தாம்பத்திய உறவிற்கு கட்டாயப்படுத்துவது உறவில் சங்கடங்கள் உண்டாக காரணியாக அமையலாம். இது போன்ற தருணத்தில் உங்கள் நிலையில் எடுத்துக் கூறுங்கள். அவர்கள் மறுக்கும் தருவாயில் அவர்கள் போக்கில் விட்டுவிடுவது நல்லது.

    Previous Next

    نموذج الاتصال